தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசி அதிகமாக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, இன்று மாலை 4 மணி வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், குறிப்பாக திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நெல்லை ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழையின் தீவிரம் குறைவாக இருந்தாலும், சில பகுதிகளில் மிதமான அளவிலான மழையை எதிர்பார்க்கலாம்.