
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கிட்டத்தட்ட 1989-ல் நடந்த சம்பவத்தை இன்னைக்கு பேசுகிறார். எல்லாமே பத்திரிகையில் வந்த செய்தி, ஊடகத்தில் வந்திருக்கிறது. என்ன சட்டமன்றத்தில் நடந்தது ? என்ற செய்தி ஊடகத்திலும் – பத்திரிகையிலும் வந்த காரணத்தினால் தான், மக்கள் அந்த அடுத்த தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்டினார்கள். இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் இருக்க கூடாது என்பதற்காக தான்…
1991-லே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவுடைய தலைமையிலே ஆட்சி அமைந்தது. இதை திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசினார்கள். சபதமேற்றி விட்டு வெளியே சென்றார் என்று சொன்னார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியேறும் போது… நான் மீண்டும் சட்டமன்றத்தில் நுழைகின்ற போது தமிழக மக்களின் பேராதரவோடு…
தமிழக முதலமைச்சராக நிச்சயம் சட்டமன்றத்தில் நுழைவேன் என்று சபதம் ஏற்று வெளியே சென்றார். அதன்படி நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 1991லே மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தி கொடுத்தார்கள். அதன் மூலமாக உண்மை வென்றது, தர்மம் வென்றது, நியாயம் வென்றது. இன்றைய தினம் முதலமைச்சர் தவறான தகவலை… பொய்யான தகவலை சொல்ல வேண்டும் என்றே… திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே மக்கள் இதற்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என தெரிவித்தார்.