
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே. சி பழனிச்சாமி கட்சியின் பெயர் சின்னங்களை பயன்படுத்துகிறார், கட்சியின் பெயரை பயன்படுத்தி மிஸ்யூஸ் செய்கிறார். போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி, சட்ட விரோதமாக பண வசூல் செய்கின்றார் என்று உரிமையியல் வழக்கை அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துக்கள் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கின் கீழ் சந்திக்க வேண்டும் என்று சென்னையில் இருக்கக்கூடிய ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி பழனிச்சாமி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த திமன்றம், அவரது கோரிக்கை நிராகரித்து, அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுவில், அந்த வழக்கின் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் கே.சி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அவதூறுக்கு ஆதாரம் இருப்பதாக கேசி பழனிசாமி தரப்பும், பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது கே.சி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பேசிய கே.சி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்கள் அவதூறானவை இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
கட்சியில் உறுப்பினர் நீக்கம் தொடர்பான நடைமுறைகளையும், கேசி பழனிசாமியை நீக்கிது தொடர்பான ஆவணங்களையும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் வாதம் பிரதி வாதம் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் வெளியான தீர்ப்பில் EPS-க்கு எதிரான வழக்கை விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கி உள்ளது.