உத்திரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு இருக்கைகள் கொண்ட ஒரு ஆட்டோ-ரிக்ஷாவில் 19 பேர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது சாலையின் பாதுகாப்பை கடுமையாக மீறுவதை மட்டுமின்றி, போக்குவரத்து விதிகளை மிகவும் அசால்டாக எடுத்துக்கொள்வதை வெளிக்காட்டுகிறது.

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் இருவேறு மனநிலையில் இருக்கிறார்கள். சிலர் இதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டாலும், பலர் பயணிகளின் பாதுகாப்பை பற்றி கவலைப்பட்டுள்ளனர். இவ்வாறான அதிகளவு பயணங்கள் வாழ்க்கையை அபாயத்திற்கு உள்ளாக்குவதோடு, போக்குவரத்து விதிகளை முற்றிலும் மீறுகிறது.

வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஜான்சி போலீசார் சம்பவத்தைக் கவனித்து, குறித்த ஆட்டோ டிரைவர் மற்றும் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களை பொதுமக்கள் புகாரளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்று ஆட்டோக்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறி, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.