உத்திர பிரதேச மாநிலத்தில் மாதுரா பகுதியில் அமைந்துள்ளது GLA பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக  பணியாற்றியவர்  சிசோடியா. இவர் தன்வர்ஷா கும்பல் மற்றும் கருப்பு மாய கும்பலுடன் தொடர்புடையவர் என சாம்பல் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கருப்பு மாய கும்பல் தொடர்பான வழக்கில் இவர் 15 வது நபராக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதாவது கருப்பு மாய கும்பல் என்பது கன்னி கழியாத இளம் பெண்கள் மீது சடங்குகள் நடத்தினால் செல்வம் பெருகும் என்ற தவறான நம்பிக்கையில் செயல்பட்டு வருபவர்கள் ஆவார். இவர்கள் 5.5 அடி உயரமுள்ள திருமணமாகாத கன்னிப் பெண்களை குறி வைத்து அவர்களை கடத்தி சடங்கு செய்வார்கள். அந்த சடங்கின் போதுல்  பணவளம் பெருகும் என்று ஒரு கற்பனையான நம்பிக்கையை கொண்டு இது போன்ற சடங்குகளை நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள் சடங்கு செய்யும்போது அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். குறிப்பாக கன்னி களியாத இளம் பெண்களை மட்டும் தான் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இவர்களிடம் பல பெண்கள் சிக்கி உள்ளதாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் இந்த சடங்குகள் செய்யும் தந்திரிகளுடன் சிசோடியாயா நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர் பெண்களை கடத்துவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.