தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முருகனின் அறுபடைவீடுகளில் தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பார்கள். இந்நிலையில் தமிழகத்தில் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டம் இயற்றினார். இதைத்தொடர்ந்து தைப்பூசத் தினத்தன்று ஒவ்வொரு வருடமும் விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும் அந்த வகையில் நடப்பாண்டிலும் நாளை தைப்பூச தினத்தில் பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.