
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய அப்டேட் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெய்லர் திரைப்படத்திற்கான இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா குறித்து மற்றொரு அறிவிப்பை அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் காண வேண்டுமா ? இசையை வெளியிட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டுமா ? Passes Kavaalaa? நாளை காலை 11 மணி வரை காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது.
#JailerAudioLaunch nerla paakanum ah? Ungalukku passes kaavaalaa? 😎
Hold on till Tomorrow 11 AM to know more details!@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/GEum9vfu8z— Sun Pictures (@sunpictures) July 22, 2023