தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெரும் நபர்கள் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். கடந்த ஜூன் மாதம் தேர்வு நடந்தது. 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த குரூப் 4 தேர்வு 432 தேர்வு மையங்களில் நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி குரூப் 4 480 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது. மேலும் பணியிடங்களை அறிவிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது