
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்காக அறிவிப்பு கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மெயின் தேர்வு குரூப் 2 பணிகளுக்கு தனியாகவும், குரூப் 2ஏ பணிகளுக்கு தனியாகவும் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் குரூப் 2 பணிகளுக்கான 507 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். மேலும் இந்த பணிகளுக்கு நாளை நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.