ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்கிறார்கள். இங்க வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம். இந்நிலையில் திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுவில் மாட்டு கொழுப்பு மற்றும் பன்றி இறைச்சி போன்றவைகள் கலந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் திண்டுக்கலை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலப்படம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர் தான் அந்த நிறுவனத்திற்கு நெய் விநியோகம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்த நிலையில் அந்த நிறுவனத்தின் மீது தேவஸ்தானம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த புகாரின் படி தற்போது காவல்துறையினர் திண்டுக்கல் பால் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.