
வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,திருவண்ணாமலையில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா 2.30 நிமிடம் பேசியதை தனது சுயசரிதையில் கலைஞ்சர் கருணாநிதி எழுதி உள்ளார். என்னைப் போன்றவர்களுக்கு கூட ரத்தம் கொதித்தது என்பார். அந்த கொதிப்போடு ராஜகோபாலச்சாரியார் வீட்டுக்கு முன்னாள் ஒரு மறியல்… நீங்கள் கலைஞருடைய நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தை எடுத்து படித்தால் ? அதிலே விவரமாக எழுதியிருக்கிறார். ராஜகோபாலச்சாரியார் வீட்டிற்கு முன்னால் மறியல்.
எல்லோரும் கோஷமிட்டு கொண்டிருக்கிறார்கள். தலைவர்கள் எல்லாம் நிற்கிறார்கள். அந்த கூட்டத்தில் எப்படியோ ஒரு பாம்பு உள்ளே நுழைந்து ஒரு கோஷமிட்டு கொண்டிருக்கின்ற ஒரு தொண்டனுடைய காலை சுற்றிக்கொண்டு, முட்டிக்கால் வரை ஏறிவிட்டது… இதை பார்த்தவர்கள் சொல்கிறார்கள்…. ஐயோ பாம்பு பாம்பு என்று பதறி ஓடினார்கள். யாரும் அதை தொடவில்லை.
தொட்டால் கொத்தி விடுமோ என்கின்ற பயம். உடனே கொஞ்சம் விலகி, அந்த தம்பியை கூப்பிட்டு… தம்பி பாம்பு காலை சுற்றி இருக்கிறது, ஜாக்கிரதை என்றார்கள். அவன் கையிலே கொடி பிடித்துக் கொண்டு கீழே குனிந்து பார்த்தார். காலில் பாம்பு சுத்தி இருக்கிறது. அப்பொழுது சொன்னான் அவன், இந்த ஆட்சியில் இருப்பதை விட, இந்த பாம்பு கடித்து செத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று அவன் பாம்பை தொடவே இல்லை. ஆனால் என்ன காரணமோ கலைஞர் எழுதியிருப்பார். அந்த பாம்பு தானாக சுற்றி இருந்து அவன் காலை விட்டுப் போய்விட்டது என எழுதியதை குறிப்பிட்டு பேசினார்.