தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புலி தோலை கொடியில் கிளிப் போட்டு காய போட்டு உள்ளனர்.

 

அதற்கு கீழே நரி ஒன்றி இருக்கும் புகைப்படத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்துள்ளார். அதில் மக்கள் மத்தியில் தனக்கான நல்ல பிம்பத்தை உருவாக்க பிரதமர் மோடி எதையும் வியாபாரம் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அன்பார்ந்த நாட்டு மக்களே உங்கள் கருத்து என்ன என்றும் கேட்டுள்ளார்.