கேரளா மாநிலம் வயநாட்டில் மானந்தவாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. கடந்த 24ஆம் தேதி ராதா என்ற பெண் ஒருவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது புலி அவரைத் தாக்கி பலியானார். மேலும் அந்த பெண்ணின் உடல் பாகங்களை புலி தின்றதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ராதாவை கொன்ற புலியை சுட்டுக் கொள்ள வேண்டும் என அந்த பகுதியை பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததோடு போராட்டமும் நடத்தியுள்ளனர். அந்த வகையில் ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் பொதுமக்கள் யாரையும் புலி தாக்கி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் 48 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதோடு வனப்பகுதியில் 6 குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் புலியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த புலி வனப்பகுதியிலுள்ள குப்பை இறந்து கிடந்தது. மேலும் அந்த புலியின் கழுத்து பகுதியில் 2 ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. மற்றொரு புலியுடன் ஏற்பட்ட மோதலில் இந்த புலி காயம் அடைந்து இறந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அதோடு ஆட்கொல்லி புலி எப்படி இறந்தது என வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புலி இறந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதியும் அடைந்துள்ளனர்.