தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் ஒரு கடையில் செய்த பிரியாணியில் பூரான் இருந்ததாக வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் பரவி வருகிறது. அதில் ஒருவர் அந்த பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பிறகு, இலையில் கருப்பு நிறத்தில் பூரான் இருந்துள்ளது. எனவே இது குறித்து அவர் கடைக்காரரிடம் கேட்டுள்ளார். மேலும் இதனை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஒரு நிமிட அளவில் ஓடும் இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருவதால், மக்களிடையே ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் இங்குள்ள ஓட்டல்களில் ஆய்வு நடத்தி, தரமில்லாத உணவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.