
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியாக சுவாதி மாலிவால் இருக்கிறார். இவர் கடந்த மே மாதம் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து, அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் மீது விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடம் தோல்வி அடைந்துள்ள நிலையில், சுவாதி மாலிவால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 ஆண்டுகள் கழித்து பாஜக டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளது. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் மகாபாரத கதையில் திரௌபதியை அவமதிக்க கௌரவர்கள் அவரை துகில் உரியும் சித்திரத்தை சுவாதி மாலிவால் தனது எஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர் கூறியதாவது, பெண்ணுக்கு ஏதாவது தவறு நடந்தால் அதை செய்தவர்களை கடவுள் தண்டிக்கிறார்கள். நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் தெருக்களின் நிலை போன்ற பிரச்சனைகளால் தான் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை இழந்தார். அவர்கள் பொய் சொல்ல முடியும் என்றும் மக்கள் அதை நம்புவார்கள் என்றும் நினைக்கிறார்கள். மக்கள் சொல்வதை செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் அதை மறுத்து விட்டனர். அவர்கள் முன்பு சொன்னதற்கு மாறாக செயல்படுகின்றனர். பாஜகவை நான் வாழ்த்துகிறேன். மக்கள் நம்பிக்கையுடன் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அதை நிறைவேற்ற அவர்கள் பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.