
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், இறைவன், நயன்தாரா 75 போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்த நயன்தாராவுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரவு நேரத்தில் தெருவோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் கையில் குடையை ஏந்தியபடி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தெருவோர மக்களுக்கு உதவியுள்ளனர். ஏற்கனவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தெருவோர மக்களுக்கு உதவி செய்யும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இப்படி தெருவோர மக்களுக்கு உதவி செய்யும் நயன் மற்றும் விக்கி தம்பதியை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் மழையையும் பொருட்படுத்தாமல் தெருவோர மக்களுக்கு நயன்தாரா உதவி செய்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
It was really kind of Lady Superstar #Nayanthara and @VigneshShivN to assist homeless persons on the streets who were suffering from the rain. #inspiringcouple pic.twitter.com/4sMsE8gbUS
— Chennai Memes (@MemesChennai) April 8, 2023