செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வை இரத்து செய்வோம்… இரத்து செய்வோம் என்று சொல்லி, பல மாணவர்கள் உயிரைப் பறித்து தான் இந்த திமுக கட்சியின் சாதனை. மாணவர்கள் உயிரிழப்புக்கு  காரணம் திமுகவினுடைய தவறான அணுகுமுறை என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மீண்டும் மீண்டும் மாணவர்களை ஏமாற்ற வேண்டாம், பெற்றோர்களை ஏமாற்ற வேண்டும். இது உச்சநீதிமன்றம் அளித்த  தீர்ப்பு. இது எல்லாம் எங்கு அழுத்தம் கொடுக்கனும். நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். திமுக கூட்டணியில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளாவது நீட் தேர்வு குறித்து, அவையை ஒத்திவைக்கின்ற அளவிற்கு அழுத்தம் கொடுத்தார்களா ? இல்லையே… நாடாளுமன்றத்தின் அழுத்தம் கொடுத்தால் தானே,  இதற்கு ஒரு தீர்வு காண முடியும்.

அதை விட்டுவிட்டு இங்கு கையெழுத்து இயக்கம்  என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். தேர்தல் வந்து விட்டது.  ஏதாவது சொல்லியாக வேண்டும். மக்கள் கேள்வி கேட்டால் என்ன சொல்ல போகிறீர்கள் ? பதில்… எந்த பதிலும் கிடையாது. இப்போது நீட் தேர்வு ரத்து செய்வதற்காக மக்கள் இயக்கமாக கையெழுத்து வாங்கிக்கொண்டு இருக்கின்றோம் என்று பச்சை பொய் சொல்ல போகிறார்கள்.

திரு. உதயநிதி ஸ்டாலின்  சில ஊடகத்திலும்,  பத்திரிக்கையிலும் பேட்டி கொடுக்கும் போது சொன்னார்.  கூட்டத்தில் பேசும்பொழுது சொன்னார்…  எங்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்வதற்கு ரகசியம் இருக்கிறது என்று சொன்னார்.  என்ன ரகசியம் ? 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குவதுதான் ரகசியமா ? எவ்வளவு வேடிக்கை பாருங்கள்….  எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள் என தெரிவித்தார்.