
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த நாட்டை ஹிந்துக்களின் நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும். அதற்கு தடையாக இருக்கின்ற அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டத்தை தூக்கி எறிய வேண்டும். அவனுக்கு என்ன ஒரே ஒரு வேலை ? இந்த நாட்டை இந்துஸ்தான் அல்லது இந்து ராஷ்ட்ரா என்று அறிவிக்க முடியாமல் இருப்பதற்கு பெரும் தடையாக இருப்பது அரசியல் கட்சிகள் அல்ல காங்கிரஸோ, கம்யூனிஸ்டுகளோ, திமுக, விடுதலை சிறுத்தைகளோ, இதர கட்சிகளோ அல்ல. அவைகள் எதிர்க்கின்றன.
ஆனால் உண்மையிலேயே அவனை தடுப்பது தடைக்கல்லாக இருப்பது மிகப்பெரிய பெரும் தடையாக இருப்பது ஒன்றே ஒன்றுதான், புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் தான். அந்த அரசியலமைப்புச் சட்டம் தான் சமத்துவத்தை பேசுகிறது, சகோதரத்துவத்தை பேசுகிறது, மனுச் சட்டத்திற்கு நேர் எதிராக… அந்த அரசியலமைப்பு சட்டம்தான் பன்மை துவத்தை பேசுகிறது, பல மதங்கள் இருக்கட்டும், பன்மைதுவத்தை பத்தி பேசுகிறது.
பல மொழிகள் பேசட்டும். பன்மைதுவம். மதசார்பன்மையை பேசுகிறது. செக்யூலரிசம். ஆனால் அரசாங்கம் மதசார்போடு இருக்க கூடாது. மற்ற நாடுகள் எல்லாம் இருக்கின்றனவே… ஏன் இந்தியாவில் இருக்கக் கூடாது ? உலகத்தில் எந்த நாட்டிலும், எந்த மதமும் சகோதரத்துவத்தை மறுக்கவில்லை….சமத்துவத்தை மறுக்கவில்லை….. சுதந்திரத்தை மறுக்கவில்லை…
இந்தியாவில் இருக்கின்ற இந்து மதம் மட்டும் தான் சகோதரத்துவத்தை மறுக்கிறது… சமத்துவத்தை மறுக்கிறது… இதை எவனும் பேசுவதில்லை… ஏன் ? முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் மதம் இல்லையா ? பாகிஸ்தானுக்கு முஸ்லிம் மதம் அரசு மதமாக இல்லையா ? இலங்கைக்கு பௌத்த மதம் அரசு மாதமாக இல்லையா ? சீனாவுக்கு பௌத்த மதம் அரசு மதமாக இல்லையா ? அந்த மதங்களில் சகோதரத்துவம் மறுக்கப்படவில்லையே….
அந்த மதங்களில் சமத்துவம் மறுக்கப்படவில்லையே…. அந்த மதங்களில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு இல்லையே…. ஆகவேதான் புரட்சியாளர் அம்பேத்கர் வாய்ப்பு கிடைத்ததை பயன்படுத்தி, இந்த அரசு மதசார்பற்ற அரசு ”செக்யூலரிசம்”… அதுதான் இன்றைக்கு அவர்களுக்கு பிரச்சினையா ? இருக்கு என பேசினார்.