சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில், ஒரு மனிதன் கழுதையை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் அந்த மனிதர் கழுதையின் முகத்தில் அறைவது, குத்துவது போன்ற செயலில் ஈடுபடுகிறார். பேச முடியாத அந்த கழுதை எதையும் எதிர்வினையின்றி தாங்கிக்கொள்கிறது. ஆனால், சில வினாடிகள் கழித்து, அந்த மனிதருக்கு கிடைத்த பதிலடி ‘கர்மா’ என்ற சொல்லை மீண்டும் நம்பவைக்கிறது.

 

அந்த மனிதர் கழுதையின் மீது சவாரி செய்ய முயற்சி செய்கிறார். அதே நேரத்தில், கழுதை திடீரென அவரை தனது பற்களால் அவரது காலை பிடித்து தரையில் இழுத்துச் செல்லத் தொடங்குகிறது. இந்த திடீர் மாற்றம், பார்த்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நொடிக்குள், வலியால் அலறிய மனிதர் உதவிக்காகக் கத்துகிறார். இது ஒரு நியாயமான பழிவாங்கல் எனக் காணப்படுகிறது.

இந்த வீடியோ X தளத்தில் “@KnowIedg3” என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை இது ஒரு லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது. கருத்துப் பகுதியில் பலரும் அந்த மனிதரை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஒருவர், “இது தான் கர்மா!” என குறிப்பிட்டார். இன்னொருவர், “இந்த மனிதர் தண்டனைக்கு தகுதியானவர்” என எழுதியுள்ளார்.

மற்றொரு பயனர், “விலங்குகளும் உணர்வுள்ள உயிரினங்கள் என்பதை இப்போது அவருக்கு புரிந்திருக்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, விலங்குகள் மீதான அக்கறையின் அவசியத்தையும், அவைகளை தவறாக நடத்தினால் ஏற்படும் விளைவுகளையும் வலியுறுத்துகிறது.