இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மிகவும் பெரிய அளவிலான விஷ பாம்பு ஒன்றை தன் முன்னால் வைத்து, அதன் பிறகு ஷாம்பு பாட்டில் இருந்து ஷாம்பு எடுத்து பாம்புக்கு தேய்ச்சு குளிப்பாட்டுகிறார். பெரும்பாலும் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை ஷாம்பு தேய்த்து குளிக்க வைப்பதுண்டு.

அதேபோன்று இந்த வாலிபர் விஷமுள்ள பாம்பை சுத்தம் செய்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதற்கு பலரும் கடுமையான எதிர்வினையை தெரிவித்து வருகின்றனர்.