நாடு முழுவதும் அடுத்த வருடம் தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள் தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும். இதனால் தமிழகம் போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. எனவே இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசி அவர் தொகுதி, மறு சீரமைப்புக்கு எதிராக நடத்தப்படும் கூட்டம் எல்லாம் ஒரு நாடகம். முல்லைப் பெரியாறு, மேகதாது பிரச்சனை குறித்து இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் பேச வேண்டும். தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகளை கொட்டி வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பிரச்சனைகள் இன்னும் தீர்வு காணப்படவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் முதலமைச்சர் கோட்டை விட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.