
என் மன் என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 18 வயதிலிருந்து 60 வயசு ஆண்கள்.. நீங்க பாத்தீங்களா… 5இல் 1 பேர் குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள். 20 சதவீத மக்கள்… 18 வயதிலிருந்து 60 வயதிற்குள்… அதையெல்லாம் ஒழிக்க வேண்டும்… அற்புதமான தமிழகத்தை படைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி இதை ஒரு கொள்கையாக கையில் எடுத்திருக்கின்றோம்.
தமிழகத்தில் கள்ளு கடையை திறக்க வேண்டும். என்றால் குடிப்பவர்களை நாம் போய் தடுக்க முடியாது. இது சர்வாதிகார நாடு அல்ல ஜனநாயக நாடு. நாம் சொல்வது டாஸ்மாக்கில் குடிக்காதீங்க, கள்ளுக்கடையை பயன்படுத்தும் என்று தான் நாம் சொல்கிறோம். அரசுக்கு வருமானம் வரட்டும், விவசாய மக்களுக்கு வருமானம் வரட்டும்,
ஒரு லட்சம் கோடி ரூபாய் பனைமரம் – தென்னை மரத்திலிருந்து 168 பொருட்களுடைய உற்பத்தியின் மூலமாக… ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வருகின்றது. இதற்கு கலைஞர் அவர்கள்… இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது, 03.06.2009இல் ஒரு குழு அமைத்தார். நீதிபதி சிவசுப்பிரமணியம் குழு. கள் இறக்குவது பற்றி அறிக்கை கொடுங்கள் என்று கலைஞர் அவர்கள் அந்த குழுவிடம் கேட்டார்கள். அந்த குழுவும் கூட 21.05.2010ல் அறிக்கை கொடுத்தார்கள். அந்த அறிக்கையை படிக்கிறேன் கேளுங்க…
கேடு விளைவிக்கின்ற ரசாயன பொருட்களை… மூலப் பொருட்களாக வைத்து தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களை அனுமதிக்கும் பொழுது, குறைந்த பாதிப்பு கொண்ட கள்ளை தடை செய்வது என்பது நியாயப்படுத்த முடியாது. இது கலைஞர் ஐயாவிற்கு நீதிபதி சிவசுப்பிரமணியம் ஐயா கொடுத்த அறிக்கையில், அவரே கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால் வாங்கி சும்மா வைத்திருக்கிறார். அதனால் நீங்கள் எல்லா கோணத்திலும்யோசித்து பாருங்கள் என தெரிவித்தார்.