செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, கடந்த 13 ஆம் தேதி  தூத்துக்குடி  மாவட்டம் வல்லநாடில்  இருக்கக்கூடிய  மணக்கரை  கிராமத்தில்  சாதாரணமான விவசாயி தன்னுடைய  சொந்த நிலத்தில்  ஆடுகளைப்  பட்டியில அடைத்துவிட்டு, மதியம் மூன்றரை மணி அளவிலே  ஓய்வெடுத்து  கொண்டிருந்தவரை அதே கிராமத்தை  சேர்ந்த  கும்பல்  சென்று  வெட்டி  வீழ்த்தி  இருக்கிறார்கள்.

அதற்கு  முழுக்க  முழுக்க  அவர் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய  எளிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதேபோல்  நான்கு  மாதங்களுக்கு  முன்பு  பாளையங்கோட்டையில் இருக்கக்கூடிய  கீழந்த கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ராஜா மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இப்படி அடுக்கடுக்காக  சம்பவங்கள்.. கொலை, கொலை முயற்சிகள், அவமானங்கள்  மணிமூர்த்தீஸ்வரம் கிராமத்தை சேர்ந்த  இரண்டு பேர் குளிக்க சென்றவர்கள் மீது மனித உரிமைகள் பாதிக்கக்கூடிய அளவிற்கு அவர்கள் மீது அவமானப்படுத்துவதற்கானச் சூழல் நடந்தன.

நாமும் தொடர்ந்து சுட்டிக்காட்டுக்கிறோம். ஆனால் இதை தடுப்பதற்கு உண்டான எந்த ஒரு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் மாநில அரசிடம்…  செயல் வடிவமாக வெளியே வரவில்லை. ஒரு சம்பவம் நடந்தால் காவல்துறை ஏதோ வழக்கு பதிவு செய்கின்றார்கள். அதிலே நான்கு பேரை கைது செய்தார்கள், அதோடு சரி…அதற்குப் பிறகு தொடர் நடவடிக்கை….

இது போல வன்முறைகள் எதோ ஒரு குடும்பத் தகராறில் உணர்ச்சி வசப்பட்டு நடப்பது ஒன்று… ஆனால் திட்டமிட்டு சாதாரண எளிய மக்கள் மனதில் அச்சத்தை  உருவாக்கி, அந்த கிராமத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்…. அவர்களுடைய உடைமைகளை… குறிப்பாக,  நிலங்களை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல சம்பவங்கள் …

அந்த மக்களுடைய நிலங்களை  அபகரிக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது.எனவே இது குறித்து மேலோட்டமாக காவல்துறையால் மட்டும் விசாரித்தால்  இதற்கு தீர்வு வராது. ஏன் என்று சொன்னால்,  அவர்களுக்கு இந்த சம்பவத்தை மட்டுமே விசாரிக்க முடியுமே தவிர, இதில் சமூக ரீதியாக இருக்கக்கூடிய பிரச்சனைகளை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால், ஒட்டுமொத்த தென் தமிழகத்தில் அமைதியான சூழலை கொண்டு வரணும் என தெரிவித்தார்.