செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,   அரசுக்கு நிறைய வேலை இருக்கு. ஏற்கனவே பல்வேறு சமூக பிரச்சனைகள் ஏற்பட்டு,  சட்டம் ஒழுங்கெல்லாம்  கெடுது. மதுவால் தினமும் எங்கேயாவது குடும்பத்தில் பிரச்சனை….  இன்னைக்கு பாத்தீங்கன்னா….  ஆளுநர் மாளிகைக்கு சுதந்திர போராட்டத்திற்கு போன நீட் ஒழிப்பு தியாகி…. போராட்ட வீரர் கூட மதுவோடு  தான் போயிருக்கிறார்.

எந்த குற்றங்களும்  செய்தபவர்களுக்கு பின்னாடியும் அதுதான் இருக்கிறது. மதுவே இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் உருவாக்கி வருகின்றது . அதனை விட்டு போட்டு சும்மா ஒரு கொடி கம்பத்துல என்ன இருக்குது… சட்டத்திற்கு புறம்பாக பாஜக  கொடி வைத்திருந்தால் அதை அகற்றி அங்க  வையுங்கள் என்று சொல்லிவிட்டால் முடிந்து விட்டது.

அதை கட்சியே பண்ணிட்டு போறாங்க. இது  சிம்பிள் வேலை… ஒரு  இன்ஸ்பெக்டர் செய்ய வேண்டிய வேலை….  சார் இது போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது அல்லது இது வேறு இடத்தில் வைத்து கொள்ளுங்கள்  என்று சொன்னால்,  இது 2 மினிட்ஸ் ஒர்க். அதுக்கு போய் ஆயிரக்கணக்கான போலீஸ்களை கொண்டு போய்  அரசு ஏன் தன்னுடைய நேரம், காலத்தை இப்படி செலவு செய்யுறாங்கன்னு தெரியல என தெரிவித்த்தார்.