
பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், அமைதியே உருவான ஒரு தலைவரை நாம் பெற்று இருக்கின்றோம். எந்த காலகட்டத்திலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காத தலைவரை நாம் பெற்றிருக்கின்றோம். இந்த இயக்கத்தினுடைய தொண்டன் நிலைக்க வேண்டும், நிலைபெற வேண்டும், இந்த கட்சி நிலை பெற வேண்டும் என்பதற்காக பல தியாகங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற ஒரு நல்லவரை, வல்லவரை நாம் பெற்று இருக்கின்றோம்.
நம்மை பொறுத்த வரைக்கும் யோசித்துப்பாருங்கள் தனது மகனுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை, அப்போதும் அவர் கோபப்படவில்லை. தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை, அப்போதும் அவர் ஆத்திரப்படவில்லை, தான் விரும்பிய தன்னுடைய இயக்கத்தை சார்ந்திருக்கின்ற… தலைமை பொறுப்போடு தன்னோடு இருந்தவர்கள் எல்லாம் தன்னை புண்படுத்தப்படுகின்ற பொழுது… வேதனைப்படுத்துகிற போது நெஞ்சங்களில் எல்லா சுமைகளையும் தாங்கிக் கொண்டு,
இந்த ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்த காலகட்டத்தையும் நான் எண்ணி பார்க்கின்றேன். ஆக ஒவ்வொன்றையும் நீங்கள் கவனித்து பார்த்தீர்களானால் எந்த காலத்தில் தனக்கென்று எதையும் நினைக்காமல், இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்களை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக அவர் உழைத்துக் கொண்டிருக்கின்ற அந்த தன்மை தான் இன்றைக்கு தமிழ்நாடே அவரை உயர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றது. வியப்பாரின் விழிகளை உயர்த்தியவரை இன்றைக்கு அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.