
நாட்டிலுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒய், இசட் என்று பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விமர்சித்துள்ளார். அதாவது எனக்கு எதுக்கு பாதுகாப்பு, நான்தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு. அவர்களுக்கு தேவை என்பதால் அவர்கள் கேட்டு வாங்கிக் கொண்டனர். எனக்கு பாதுகாப்பு எதுவும் தேவையில்லை என்று அவர் கூறினார்.