
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பண்டிகைன்னா…. என்ன காலையில குளிக்கணும், பணியாரம் சாப்பிடணும், சரக்கு அடிக்கணும். புதுசா படம் பாக்கணும். பண்டிகை ஓவர். முடிஞ்சிச்சு. அது இல்லையே… அது இல்லையே வாழ்க்கை…. வாழ்க்கை அது இல்ல .பிழைப்பது வேறு, வாழ்வது என்பது வேறு. நாம் வாழ வில்லை. பிழைத்து கொண்டிருக்கிறோம்.
வாழ்வது என்பது செம்மார்ந்து வாழ்வது… வறுமையிலும் செழுமையாக வாழ்வது…. அந்த வாழ்க்கை முறை வேறு, இப்பொழுது நம்ம நிலபரப்புக்கு என்று எந்த உரிமையும் இல்ல… எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டான். கல்வி உரிமை இல்லை, மருத்துவ உரிமை இல்லை, எதுவுமே இல்லை.ஆனால் தொடக்கத்துல மாநில உரிமையை முன்வைத்தவர்கள் இவர்கள் தான்.
மாநில சுயாட்சி, மாநில தன்னாட்சி. அதெல்லாம் முன்வைத்தது இவர்கள்தான். இப்போ குடிக்க தண்ணி வச்சிருக்கியா ? இல்ல. தண்ணி குடிக்கிறேன். அது தண்ணியா ? இல்ல. சத்தியமா இல்ல. தண்ணியில் மினரல் இருக்கும். அது மனித உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. இப்போ இருக்குற தண்ணி…. குடுவையில விக்கின்ற தண்ணி தாக்கத்தை தீர்க்கும்.
ஆனால் தண்ணீரால் மனித உடலுக்கு கிடைக்க கூடிய ஆற்றல் இருக்குல்ல… அது இருக்காது. ஏன் இருக்காது ? அதை சுத்திகரிக்கிறேன் என்ற பெயரில்… மினரல் இருக்குல்ல…. அந்த மினரலை கொன்னுட்டு தான்… மினரல் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலே முட்டி வலி வர காரணம் இந்த மினரல் இல்லாதது தான். தண்ணீரால் கிடைக்க கூடிய சத்துக்கள் இல்லாதது தான். குடிக்க தூய நீர் இல்ல.
தண்ணீர் நஞ்சாகிட்டு…. ஏன் மூணு வயசு பிள்ளைக்கு புற்று நோய் வருது ? ஏன் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும்பாலான தாய் மார்களுக்கு மார்பு புற்று நோய் வறுத்த. புற்று நோய் பெரும் எண்ணிக்கையில் பெருகுது. உணவு நஞ்சாகிட்டு. நீ உண்கின்ற உணவை ஏன் நஞ்சானது ? மரபணு மாற்றத்தால்…. 1கிலோ கத்தரிக்காய் வாங்க போனீங்கன்னா…. 10 கத்தரிக்காய் இருக்குற இடத்துல, ஒரே கத்தரிக்காய் ஒரு கிலோ. அந்த கத்தரி விதையை எடுத்து.. அதுக்குள்ளே மரபணுவை மாற்றி,
மொக்க மொக்கையா பெறுக்கிட்டான். மிளகாய் இவ்ளோ தண்டி தான பாத்த… இமாம் தண்டி மிளகாய்… பச்சி போடும் போது பாரு கடைல ? மிளகாய் பச்சி இவ்ளோ பெருசா? சுரைக்காய் மாதிரி வச்சி அறுத்துட்டு இருப்பான். சுரைக்காய் என்பது கழுத்து சின்னது… இடுப்பு பெருசா இருக்கும். பதிநீர் கல்லுலாம் இறக்கும் போது… இது கழுத்துல போட்டு… குடுவையா வச்சி, நம்ம முன்னோர்கள் தேன் எடுக்குறது… இதுக்கு எல்லாம் பயன்படுத்துனது இருக்கு.
இன்னைக்கு சுரைக்காய் அப்படி கிடையாது… நீட்டமா அம்மிக்குழவி மாதிரி இருக்கும். ஏனென்றால் ? மரபணு மாற்றம்… புடலங்கா இப்படி தொங்கும். இப்போ குட்ட குட்டையா இவ்ளோ இவ்ளோ பெருசா அடுக்கி வச்சிருக்கான் புடலங்கா. புடல தான், காய் கிடையாது அது. நாங்க நீளமா வளரணும்னு பந்தல்ல கல்லை கட்டி விடுவோம். அவரு தரை வரைக்கும் பெருசா போவாரு. இப்போல்லாம் அப்படி இல்ல எல்லாம் மரபணு மாறிடுச்சு.
தக்காளி முன்பு எல்லாம் கீழே போட்டா வெடிக்கும். இப்போ கீழே போட்டா குதிக்கும். தக்காளியின் விதைக்குள்ள தவளையின் கொழுப்பை உள்ள செலுத்திட்டான். ஆப்பிள்ன்னா ரெண்டு நாளு…. மூணு நாளு கெட்டும். இப்போ 6 மாசம் ஆனாலும் இருக்கும். ஏன்னா மேல மருந்து தடவி… மெழுகை தடவி… கொடுத்துட்டான். இப்ப இதை உணவா நீ உண்ணுகிறாய். உன்னுகிட்டே வரும்போது, உன்னுடைய மரபணுவை மாற்ற வேண்டியது இல்லை. நீரும் – உணவும் உள்ள போய் மரபணுவை மாற்றிடுது.