செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK வாசன், தொடர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும். குறிப்பாக அண்டை நாடுகளில் இருந்து நம்முடைய மீனவர்களை அச்சுறுத்துவதும்,  தாக்குவதும் அதிகமாகி கொண்டிருக்கிறது. மத்திய – மாநில அரசுகள் இதிலே கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசு அண்டை நாடுகளோடு கலந்து பேசி,  மாலத்தீவாக இருக்கலாம் அல்லது ஸ்ரீலங்காவாக இருக்கலாம் கலந்து பேசி,  மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தி…  அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று தாமாக வலியுறுத்துகிறது.

இந்தியாவிலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு…. தேர்தல் வாக்குறுதிகளை இரண்டரை வருடம் கழித்து நிறைவேற்றாத ஒரு அரசு…. பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றாத அரசு…. என்றால் அது திமுக அரசு தான். காத்துக் கொண்டிருந்த மக்கள் ஏமாற்றத்திலே இருக்கிறார்கள்.

எனவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிர்மறை வாக்கு,  தமிழக ஆட்சியாளர்களை எதிர்த்து அதிகரித்து கொண்டு போயிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் முறையாக…. சரியாக எல்லா தரப்பினருக்கும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்கட்சி என்ற முறையிலே நாங்கள் வலியுறுத்துகிறோம்.