
தவெகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நடிகர் தாடி பாலாஜி அவ்வப்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது, விஜய்யை 10,000 பேருக்கு தெரியும் என்றால், என்னை ஒரு 100 பேருக்கு தெரியும். இது என்னுடைய உழைப்பு. அது அவருடைய உழைப்பு.
பாலாஜி ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால், அவர்தான் போக்கஸ் ஆகுகிறார். நம்ம ஆக மாட்டோம் அப்படின்னு பேசுகிறார்கள். வேணுமென்றே என்னை நிகழ்ச்சியில் அவாய்ட் பண்றாங்க. இவங்க எல்லாம் யாரு, இவங்க யாருக்காகவும் நான் வரவில்லை. நான் வந்தது விஜய் சாருக்காக மட்டும்தான். எனக்கு தேவை விஜய் சார் மட்டும்தான். என் உழைப்புக்கு பலன் நிச்சயம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.