
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்,நீங்க என்ன போடுவீங்க ? பட்டியல் இனம்ன்னு போடல… தேவேந்திர குல வேளாளர்ன்னு போட்டு இருக்கீங்க…. தேவேந்திர குல வேளாளர்கள் வாழனும்ன்னு தான் பத்திரிக்கையில் போட்டு இருக்கீங்க… தேவரும், தேவேந்திரனும் இணக்கமாக வாழ்ந்துட்டு இருக்கின்றோம்.
எங்களுக்குள்ளே எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் சாகப்பட்டவர்கள்… கொலை செய்யப்பட்டவர்களுக்கும், கொலை செய்தவர்களுக்கும் முன் விரோதம் இருக்கானா? இல்ல. அப்போ அது எப்படி ஜாதியா போகும். எந்த காரணமும் இல்லை… கஞ்சாக்கள் அதிகமாக நடமாடுகிறது…. கஞ்சா குடிச்சு தான் வெட்டி இருக்கான். இப்போ மூணு கொலை இங்க நடந்துச்சு….
நத்தத்தில் கொலை நடந்தது. கஞ்சா குடிச்சு தான் வெட்டி இருக்கான். மணிமுத்தீஸ்வரத்துல வெட்டுனது கஞ்சா குடிச்சு தான் வெட்டி இருக்கான். இப்போ நடந்த மணக்கரை மணி கஞ்சா குடிச்சுட்டு தான் வெட்டி இருக்கான். கஞ்சா போதையில் அதிகம் கொலை செஞ்சி இருக்கான், அவ்வளவுதான்… அப்போ கஞ்சா அதிகமா இருக்குன்னு சொல்றேன்.
அங்கு இருக்கிறவங்க அவுங்க மட்டும் தான் இருக்காங்க, வேற ஜாதி கிடையாது. தேவரும், தேவேந்திரனும் தான் இருக்காங்க.. வேற கம்யூனிட்டி கிடையாது. கொலை நடந்த இடங்களில் நீங்க பாத்தீங்கன்னா… தேவரும், தேவேந்திரனும் மட்டும்தான் இருக்காங்க… வேற கம்யூனிட்டி அங்க கிடையாது… நீங்க போய் பாருங்க மனக்கரையில் யார் இருக்கா ? நத்ததில் யார் இருக்கா ? இவங்க தான் இருக்காங்க. ஒவ்வொரு பகுதியும் நீங்க ஆராய்ந்து பார்த்தீங்கன்னா…. அவுங்க தான் இருக்காங்க என தெரிவித்தார்.