அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் குழந்தை பராமரிப்பாளர் குழந்தையை தூங்க வைக்க முயன்ற போது நடந்த எதிர்பாராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் கிரேட் பேண்ட் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு குடியிருப்பில் கடந்த மார்ச் 24ஆம் தேதி இரவு 10 மணியளவில் குழந்தை பராமரிப்பாளர் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த குழந்தை படுக்கையின் கீழே பேய் இருக்கிறதா? என்று பாருங்கள் என்று எதார்த்தமாக கேட்டது. அதற்கு குழந்தையின் பராமரிப்பாளர் படுக்கையின் கீழ் பார்த்தபோது ஒரு நபர் மறைந்திருந்ததை கண்டுபிடித்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக குழந்தையை அந்த நபர் கீழே தள்ளி விட்டார். இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பதற்றமடைந்த பராமரிப்பாளர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை தொடர்ந்து மறுநாள் காலை அந்த பகுதியில் போலீசார் தீவிர தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் அந்த நபரை கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரிடம் நடத்தி விசாரணையில் மார்டின் வில்லோபோஸ் ஜூனியர் என்றும், இதற்கு முன்பு அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறினார். மேலும் இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது