அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது. வர்த்தகக் கொள்கையில் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் சமமற்ற நிலை உள்ளது. புதிய வரி விதிப்பு முறையில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதோடு அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா உட்பட மற்ற நாடுகள் விதிக்கும் வரியை போலவே அமெரிக்காவும் வரி விதிக்கும் என்றும், இந்த நடைமுறை ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.