கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், சென்னை சேர்ந்த பெண்ணிற்கும் நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான அனைத்து வேலையையும் இருவீட்டாரும் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரசாத் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டுவிட்டு மாடியில் உள்ள அறையில் தூங்குவதற்காக சென்றார். அதன் பின் காலையில் நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.

இதனால் அவருடைய தந்தை தனசேகர் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தனசேகர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இவரது தற்கொலை முடிவுக்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.