
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு தீயை மிதித்து வேண்டுதலை நிறைவேற்றி வந்தனர்.
View this post on Instagram
“>
அந்த வகையில் குமார் என்ற நபர் தனது 6 மாத குழந்தையுடன் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தீ மிதிக்க வந்த நிலையில் அக்னி குண்டத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அக்னி குண்டம் அமைக்கப்பட்ட பாதையின் அருகில் குழந்தையுடன் விழுந்தார். இதனை கண்ட பக்தர்கள் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்த கோயில் ஊழியர்கள் பக்தர் குமாரையும், அவரது குழந்தையையும் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.