
சானிடைசர் என்று நினைத்து சூடான காப்பியை உள்ளங்கையில் ஊற்றிய இளைஞரின் செயல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதை ஒரு வேடிக்கையான சம்பவமாக பார்க்க பலர் கருதலாம். ஆனால் பிளாஸ்டிக் பாக்ஸ் இல் காபிக்கு பதிலாக ரசாயன திரவம் இருந்திருந்தால் என்னவாக இருக்கும் என்று பதை வதைக்க சிந்திக்க வைத்துள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு கைகளை சுத்தம் செய்யும் வழக்கம் உலகம் முழுவதும் வந்துவிட்டது. அதனால் நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள சனிடைசரை பாட்டிலில் அடைத்து அலுவலக வரவேற்பு அறை அல்லது நுழைவாயிலில் வைத்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
ஆனால் சில சமயங்களில் ஒரே மாதிரியான பேக்கேஜ் காரணமாக தயாரிப்புகளை வேறுபடுத்தி பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிளாஸ்டிக் கப்பில் கொதிக்கும் சூடான காபியை சானிடைசர் என்று நினைத்து தவறாக எண்ணியதன் விளைவு தான் இந்த புகைப்படத்தில் நாம் காணும் சம்பவம்.