கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் ஆலம்(24) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27 ம் தேதி தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறைக்கு இளம் பெண் குளிப்பதற்காக சென்றுள்ளார். அவர் குளித்துவிட்டு வெளியே வரும் நேரத்தில் அங்கு வந்த மன்சூர் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி தன்னுடைய வீட்டிற்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கு வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற மன்சூரை தடுத்து நிறுத்தி தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மன்சூர் ராமநகர் உள்ள நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அந்த இளம் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதால் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.