
AI குறித்த வீடியோக்கள் மற்றும் விவாதங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதேபோன்று சமீபத்தில் AI ரோபோவிடம் ஒரு பெண் திருடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு AI ரோபோ சிகப்பு நிற பையை கையில் வைத்துக் கொண்டு திரும்பி நின்று கொண்டிருந்தது.
அப்போது மெதுவாக வந்த பெண் ஒருவர் ரோபோவின் பின்னால் இருந்த சிவப்பு நிற பையை தனது பைக்குள் வைத்து எடுத்துக்கொண்டு சட்டென திரும்பினார். இதனால் குழப்பம் அடைந்த ரோபோ தனது பையைத் தேடி அந்த பகுதி முழுவதும் ஆய்வு செய்தது. அதன் பின் அந்தப் பெண்ணை பார்த்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram