பாஜக அரசால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் 90 தொகுதிகளை கொண்டது. வருகிற செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி 25-ஆம் தேதி அக்டோபர் 1- ஆம் தேதி என மூன்று கட்டங்களாக அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பரூக் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியோடு கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட உள்ளது.

இதனை முன்னிட்டு ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே காஷ்மீருக்கு சென்று கூட்டணியை உறுதி செய்ததால் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, காங்கிரஸ் கட்சி மோடியை மனதளவில் நம்பிக்கை இழக்க செய்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் அரசியலமைப்பை மதித்து செயல்பட நிர்பந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நேற்று உத்தர பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் இட ஒதுக்கீட்டை மேம்படுத்த முடியும் என கூறினார். இந்த நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சேஷாத் பூனாவாபா காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகளின் கூட்டணி குறித்த ராகுல் காந்தியின் அரசியல் அமைப்பு பேச்சு குறித்தும் விமர்சித்து வீடியோ வெளியிட்டார். அதில் அரசியலமைப்பு குறித்த ராகுல் காந்தி பேசுவது சாத்தான் பகவத் கீதையையும், குர்ஆனையும் ஓதுவது போன்றது.

ராகுல் காந்தி உண்மையிலேயே அரசியல் அமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு பற்றி அக்கறையோடு இருந்தால் காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி பற்றி விளக்கம் கொடுக்க வேண்டும். அதாவது தேசிய மாநாடு கட்சியின் கொள்கைகளான சட்டப்பிரிவு 370 வதை திரும்ப கொண்டு வருவதையும், ஒரே நாட்டுக்கு இரண்டு வகையான சட்டம் மற்றும் கொடி இருப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? என்று விளக்கம் அளிக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.