
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான விஷால் வெங்கட் தற்போது “பாம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ஸ்வாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் அபிராமி, காளி வெங்கட், சிங்கம்புலி, நாசர், பாலசரவணன், பூவையார், டிஎஸ்கே, சில்வென்ஸ்டன் ஆகிய நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
Happy to launch the #Bomb Title Teaser 💣
A fun-packed entertainer is on the way! Wishing the entire team a super success 🎉💥▶️ https://t.co/QRdLLbhaXm@iam_arjundas @ShivathmikaR @kaaliactor @gembriopictures @SudhaSukumar4@kaizensukumar @vishalvenkat_18 @immancomposer…
— venkat prabhu (@vp_offl) June 27, 2025
இந்நிலையில் படக்குழு இன்று “பாம்” படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.