கேரளாவை சேர்ந்த முகமது ரினாஷ் அரங்கிலொட்டு மற்றும் முரளீதரன் என்பவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது அமீரகவாசி ஒருவரை படுகொலை செய்ததற்காக முகமது ரீனாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியர் ஒருவரை படுகொலை செய்ததற்காக முரளீதரனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஐக்கிய அரபு அமிரகம் மரண தண்டனை வழங்கியது. அதன் பின் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என கோட் ஆப் கேஸ்ஸேசன் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய வெளி விவகார அமைச்சகம் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என இந்திய தூதரகத்திடம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அமீரகத்திடம் மன்னிப்பு கோரியும் கருணை காட்டும் படியும் மத்திய வெளி விவகார அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த வேண்டுகோள் பலனளிக்காத நிலையில் இவர்கள் இருவருக்கான தண்டனை பற்றிய விவரங்கள் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அவர்களின் இறுதி சடங்கிற்காக இந்திய தூதரகம் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.