தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் சமீபத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றுள்ளது. இப்படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

 

இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை அப்படக் குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.