முகமது ஜாகீர் (21) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் திருப்பதியில் இருந்து தனது தங்கையுடன் மன்னார்குடி பாமினி எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார். வேலூர் கன்டோன்மென்ட் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அவரது உடல் ரயிலில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதேபோல் தன்பாத் எக்ஸ்பிரஸ் பாலக்காட்டில் இருந்து சம்பல்பூர் சென்று கொண்டிருந்த ரயிலில் கேரளாவை சேர்ந்த சந்திப் கிருஷ்ணன் பயணம் செய்தார்.

இவர் டீ குடிப்பதற்காக பிளாட்பார்த்தில் இறங்கி உள்ளார் திடீரென ரயில் புறப்பட்ட உடன் ரயிலை பிடிப்பதற்காக வேகமாக சென்ற போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.