பள்ளித் தேர்வின்போது பிட் அடிக்க முயன்ற மாணவனை வேற இடத்தில் அமரச் சொல்லியதற்காக, அந்த மாணவன் ஆசிரியரை இரும்புக்கம்பியால் தாக்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்த சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்ததாகவும், ஆசிரியர் மாணவனை பிட் அடிக்கும் போது பிடித்து வைத்து, வேறு இடத்தில் அமரச் சொல்லியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன், பள்ளி மணி அடிக்க பயன்படுத்தப்படும் இரும்புக்கம்பியால் அவர் ஆசிரியரை தாக்கியுள்ளார்.

தாக்குதலில் ஆசிரியர் சிறு காயங்களுடன் தப்பியதாகவும், அதற்கான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, 15 வயது மாணவனை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.