
பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசல் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் மற்றும் ஸ்பெயின் வீரரான அல்கராஸ் என்பவரும் மோதினர். அல்கராஸ், இதுவரை 7 முறை சின்னரை வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளார். குறிப்பாக கடந்த நான்கு போட்டிகளில் சின்னரை வீழ்த்தியுள்ளார்.
ஆனால், சின்னர் 4 முறை மட்டுமே அல்கராஸை வென்றுள்ளார். எனவே இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று வெற்றி மகுடம் சூடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் சின்னரை 6-4, 7-6, 4-6, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் அல்கராஸ் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றார்.