
உத்திரகான்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் மாவட்டத்தில் பிரபல நகை கடை அமைந்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உரிமையாளரை மிரட்டி 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சதேந்திர பல் என்பவரை நேற்று போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த சதேந்திர பல் தனது கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் ஹர்வல் பகுதி அருகே சென்றார். அப்போது போலீசா வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதனை பார்த்ததும் சசேந்திரபல்லும் அவரது கூட்டாளியும் தப்பியோட முயற்சி செய்தனர். உடனே போலீசார் இருவரையும் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் சதேந்திர பல் உயிரிழந்தார். மற்றொரு திருடன் தப்பி ஓடிவிட்டார், இந்த அதிரடி நடவடிக்கையில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது.