ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் அரசு அந்த நாட்டில் சதுரங்கம் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது. இது குறித்து விளையாட்டு இயக்குநரக செய்தி தொடர்பாளர் அடல் மஷ்வானி பேசியுள்ளார். அவர் சூதாட்டத்தின் ஒரு வடிவமாக சதுரங்கம் உள்ளது. இதனால் நாட்டின் நன்மையை ஊக்குவிப்பதற்காகவும் தீமையை தடுப்பதற்காகவும் இயற்றப்பட்ட சட்டத்தின் படி இந்த சதுரங்க விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

சதுரங்கம் விளையாடப்படுவதால் மத ரீதியான ஆட்சேபனைகள் ஏற்படுவதாகவும், அதற்கு முடிவு தெரியும் வரை இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்” என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய வணிகங்கள் அரசின் இந்த முடிவால் தங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இந்த சதுரங்க விளையாட்டில் பெண்கள் பங்கேற்க கூடாது என்று தாலிபான் அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.