இந்தியா பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சூழலில், அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்திய கடற்படையுடன் இணைந்து மல்டி- இன்ஃப்ளேன்ஸ் மைன் என்ற கண்ணி வெடி ஆயுத சோதனையை கடலுக்கு அடியில் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

அந்த MIGM (multi influence mine) என்ற கண்ணி  வெடி உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அவை கடலுக்கு அடியில் ஒலி, காந்தஅலைகளை அடையாளம் கண்டறிந்து எதிரி கப்பல்களை முறியடிக்கும் திறன் கொண்டது என டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது.