
வாட்ச்மேன், கோமாளி போன்ற தமிழ் படங்கள் மூலம் பிரபலமானவர் தான் சம்யுக்தா ஹெக்டே. இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். அடிக்கடி செய்திகளில் இடம் பிடித்து வருபவர் சம்யுக்தா. இவர் தற்போது தன் நெருங்கிய தோழிக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
சமித்தாவின் நெருங்கிய தோழியான பூஜிதா பாஸ்கருக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது அவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நீ உயிரை விட கொஞ்சம் முக்கியமானவர் என்று பதிவிட்டுள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து நீங்கள் பெண் ஈர்ப்பாளரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நடிகை சம்யுத்தா இந்த முத்தத்துக்கு பின்னால் அதீத நட்பும் அன்பு மட்டும் தான் உள்ளது. என் உயிர் தோழி அவர். அதனால் தான் அன்பின் வெளிப்படையாக முத்தம் கொடுத்தேன். மற்றபடி நான் அந்த மாதிரி பெண் என்று நினைக்காதீர்கள் என்று சிறுத்தபடி பதிலளித்தார்.