கர்நாடகாவில் விவாகரத்து கேட்டு ஒரு தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் கணவரிடம் இருந்து குழந்தை பராமரிப்பு செலவுக்கு மனைவி பணம் கேட்டுள்ளார். அந்த வழக்கு விசாரணைக்கு நடந்தது. அப்போது கணவர் மாதம் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாக கூறினார். ஆனால் மனைவி மாதம் 10 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு செலவுக்கு தர வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விட்டால் அவரால் மீதமுள்ள தொகையை வைத்து எப்படி வாழ முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் கணவரின் ஊதியம் அதிகரித்தால் குழந்தை பராமரிப்பு செலவை அதிகரிக்க கோரி மனைவி மற்றொரு வழக்கு தொடரலாம் என நீதிபதி கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.