
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் நடந்த துயர சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 10 வயது சிறுவன் நிரஞ்சன், தனது நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றபோது, நுழைவாயில் இரும்பு கேட் அவரது மீது விழுந்து, படுகாயங்களால் உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவத்தல் மகனை இழந்து கதறி அழுத தாயின் வலி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது
இரும்பு கேட் பலமுறை பழுதுபார்க்கப்பட்டிருந்தாலும், முழுமையான பராமரிப்பு இல்லாததால் இந்த துயர சம்பவம் ஏற்பட்டதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் எனவும் கூறினர்.அதே சமயம், இந்த விபத்தை தவிர்க்க முடிந்திருக்குமா என்ற கேள்வி பெருமளவில் எழுந்துள்ளது.